Categories
சினிமா

அடடே…! “விவாகரத்தாகியும் சமந்தாவை ஃபாலோ செய்யும் மாஜி கணவர்”… பாராட்டும் ரசிகர்கள்…!!!

விவாகரத்துக்குப் பின்னும் சமந்தாவை இன்ஸ்டாவில் பின்தொடரும் நாக சைதன்யா.

சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் நான்காவது வருட திருமண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பின் நாக சைதன்யாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியதோடு நாக சைதன்யாவை பின் தொடர்வதையும் நிறுத்தினார் சமந்தா.

ஆனால் நாக சைதன்யாவோ சமந்தாவின் இன்ஸ்டாவில் இன்றளவும் பின்தொடர்கிறார். இதை கவனித்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் சமந்தாவை பிரிந்தும் கூட இதுவரையில் சமந்தாவைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பதால் இது இவரின் நல்ல குணத்தை குறிப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். சமந்தா நாக சைதன்யாவை பின் தொடராமல் இருந்தாலும் அவரின் குடும்பத்தார்களை பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |