உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் மிகப்பெரிய அளவுக்கு பண மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி செயலின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் பல்வேறு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் செய்திகள் சாட் என்று அனைத்துமே என்கிரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பாக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் செயலியில் யுசர்கள் பயன்படுத்தும் ப்ரோபைல் போட்டோ, ஸ்டேட்டஸ் மறைப்பது, லாஸ்ட் சீன் மற்றும் இதர விவரங்களை முன்பின் தெரியாதவர்கள் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்காக சில அப்டேட் செய்ய போகின்றது என்று வாட்ஸ் அப் செயலியில் தலைமை நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ஒரு சில பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த கூடிய அளவுக்கு ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் அச்சுறுத்தல் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உங்களுடைய வாட்ஸப் கணக்கில் பெயரை மறைப்பதற்காக, வாட்ஸ்அப் கணக்கின் பெயர் இருக்கும் இடத்தை வெற்றிடமாக மாற்றக்கூடிய ஆப்ஷனை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் முழுவிபரம்
* உங்கள் வாட்ஸ்அப் கணக்கைத் திறந்து, திரையின் வலது மேல்பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் மீது டாப் செய்து செட்டிங்ஸ் பகுதிக்குச் செல்லவும். அடுத்ததாக, அம்புக்குறி சின்னத்தை நகல் எடுக்கவும்.
* வாட்ஸ்அப் கணக்கில் உங்கள் பெயருக்கு முன்னே இருக்கும் பென்சில் சின்னத்தின் மீது டாப் செய்து, நகல் எடுத்த அம்புக்குறி சின்னத்தை உங்களின் தற்போதைய பெயர் இருக்கும்.
* பின்னர், உங்கள் பெயரை மாற்ற அம்புக்குறி சின்னத்தை நீக்கி, OK என்ற பட்டனைக் கிளிக் செய்து. OK வைக் கிளிக் செய்த பிறகு, வாட்ஸ்அப் கணக்கில் உங்கள் பெயர் இருக்கும் இடம் வெறுமையாக (blank) இருக்கும்.
* உங்கள் பெயரை அல்லது பெயர் இருக்கும் இடத்தை முழுமையாக வெற்றிடமாக வைக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் (,), (-), (;), உள்ளிட்ட ஸ்பெஷல் கேரக்டர்களை பயன்படுத்தலாம். ஆனால் ரேண்டம் யூசர்களுக்கு, உங்கள் பெயர் இருக்கும் இடத்தில் முற்றுப்புள்ளி தான் தெரியும்.
* உங்கள் மொபைல் எண்ணை வேறு யாரேனும் தங்கள் மொபைலில் சேமித்து வைத்திருந்தலும், அவர்கள் என்ன பெயரில் உங்கள் எண்ணை சேமித்து வைத்துள்ளார்களோ, உங்கள் வாட்ஸ்அப் கணக்கு அந்தப்பெயரில் தெரியும்.