வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அவை என்னவென்றால், Delete for every one என்ற அம்சத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் அப்டேட்இன் படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக வெளியிட்டது. அவற்றின்படி, Delete for every one என்ற அம்சத்தில் மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது.
அனைவருக்கும் நீக்கும் ஆப்ஷன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் செயல்படுத்த முடியும். ஆனால் இந்த கால வரம்பை நீக்கி முடிவெடுத்துள்ளது.
அதனால் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா 2.2147.4 வெர்சனில், Delete for every one என்ற ஆப்ஷனில் கால வரம்பை 7 நாட்கள் மட்டும் 8 நிமிடங்கள் வரை என்று நீட்டித்துள்ளது. இந்த புதிய படத்தின்படி, தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ள 2.221.1 அப்டேட் வரும், ஆண்டின் முதல் பீட்டா அப்டேட் ஆக இருக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அப்டேட்படி, வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள டெலிட் ஆப்ஷன்களில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, நீங்கள் வாட்ஸப் குழுவின் அட்மினாக இருந்தால், குழுவில் பகிரப்படும் அனைவரும் மெசேஜ்களை ஆப்ஷனை பயன்படுத்தி நீக்க முடியும். அனைவருக்கும் இந்தத் திட்டம் இப்போது அறிவித்திருந்தாலும், அவை எதிர்காலத்தில் தான் அனைவருக்கும் கிடைக்கும் அம்சமாக சேர்க்கப்படும். மேலும், இந்த அம்சம் டெவலப்மெண்ட் நிலையில் உள்ளதால், இதில் பீட்டா டெஸ்டுகளுக்கு இன்னும் அப்டேட் செய்யவில்லை. இந்த புதிய திட்டம் பயனர்களுக்கு மட்டுமே முதலில் வெளியிடப்படும். அதன்பின்னர், சில வாரங்களுக்குப் பிறகு அனைத்து ஆன்டிராய்டு பயனாளிகளுக்கும் அப்டேட் வெளியாகும்.