வருமான வரியை சேமிக்க உதவும் சிறந்த திட்டமாக எஸ்பிஐ வரி சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வருமான வரி செலுத்துபவர் தங்களது வரியை சேமிக்க பல்வேறு திட்டங்கள் சட்டரீதியாகவே அனுமதிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம் பிரிவு 80 சி கீழ் வருமானம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் வருமான வரியை சேமிக்க முடியும். இந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள வரி சேமிப்பு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம்.
SBI Tax savings scheme 2006 ,எனப்படும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச காலம் 5 ஆண்டுகளாகும். அதிகபட்ச காலம் 10 ஆண்டுகள். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கு வசிப்பவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பான் கார்டு கட்டாயமாக இருக்கவேண்டும். வயது வந்தவர்கள் இரண்டு பேர் அல்லது வயதுக்கு வந்த ஒருவருடன் சேர்ந்து சிறுவர் ஒருவர் (18 வயதிற்குள்) கூட்டுக் கணக்கை தொடங்கலாம்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
* வருமான வரியை சேமிக்க முடியும்
* 5.5% வட்டி வருமானம் கிடைக்கிறது
* ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு