Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!…. பிரியங்கா சோப்ராவின் குழந்தை பெயர் இதுதானா?…. வெளியான தகவல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதனை அறிவித்தனர். இந்த நிலையில் நிக் ஜோனஸும், பிரியங்கா சோப்ராவும் தங்கள் மகளின் பெயரை வெளியிட்டுள்ளனர். அதாவது தங்களுடைய குழந்தைக்கு Malti Marie Chopra Jonas என்று பெயரிட்டுள்ளனர். இதில் பிரியங்கா சோப்ராவின் அம்மா பெயரான Madhumalti Chopra என்பதில் இருந்து “Malti” என்பதும், நிக் ஜோனஸின அம்மாவான Denise Marie Miller Jonas என்பதில் இருந்து “Marie” என்பதும் இடம்பெற்றுள்ளது.

Categories

Tech |