பள்ளி கழிவறை ஒன்று சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்ட பாஜக எம்பி வெறும் கைகளால் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா. இவர் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட அரசு பெண்கள் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் பின்னர் அங்கு பள்ளி கழிவறை சுத்தம் செய்யாமல் இருப்பதை கண்டார்.
இதனையடுத்து உடனே பள்ளி கழிவறையை அவர் தன்னுடைய கையால் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/Janardan_BJP/status/1572955219750699011