Categories
தேசிய செய்திகள்

அடடே நம்பவே முடியல!… பார்க்க அப்படியே மனிதன் போல இருக்கு…. ஆச்சரியத்தில் மக்கள்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நவாப்கான் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு மனிதனின் முக அமைப்பை கொண்ட ஒரு குட்டியை ஈன்று இருக்கிறது. இந்த ஆச்சரிய சம்பவம் அம்மாநிலத்தில் விதிஷாவிலுள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ஆடு மனிதமுகம் கொண்ட குட்டியை ஈன்ற செய்தி கிராமம் முழுதும் பரவியதை அடுத்து அந்த பகுதி மக்கள் அவரது வீட்டிற்கு திரண்டு சென்றனர். அந்த ஆட்டுக் குட்டியின் மனிதனைப் போன்ற முகம் மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

அதாவது அது மனிதனைப் போன்ற கண்கள், வாய் மற்றும் மூக்கு போன்றவற்றைக் கொண்டிருந்தது. அத்துடன் கண்களைச் சுற்றி ஒரு மனிதனின் கண்ணாடியைப் போன்ற கருப்புவளையங்கள் இருந்தது. மேலும் அதன் தலையில் அடர்த்தியான வெள்ளை ரோமங்களும், அதன் கன்னத்தை சுற்றி தாடி போன்ற தோற்றமும் இருந்தது. இந்த ஆட்டுக் குட்டியை சில பேர் வீடியோ எடுத்து இருக்கின்றனர். அந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Categories

Tech |