கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்.
கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் அரசு நடத்தி வருகின்ற இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மருத்துவ கல்லூரியில் அஸ்மா பீவி என்ற 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வாரியத்தினர் மூதாட்டியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இருந்தாலும் சில சமயங்களில் மூதாட்டியின் உடல்நிலை மிக மோசமாக இருந்துள்ளது. பின்னர் மூதாட்டி பீவி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார். அதே சமயத்தில் மூதாட்டிக்கு அவரின் மகளிடம் இருந்து கொரோனா தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் மிகவும் வயதான நோயாளியாக பீவி என்ற மூதாட்டி இருந்துள்ளார்.