திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ஆக 4 கோடியே 50 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடி காணிக்கை செலுத்தி வருகின்றன. கொரோனா தொற்று பரவலுக்கு முன் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு பின் தற்போது கூடுதல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் திருப்பதியில் நேற்று முன்தினம் 53,163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அன்று 20,651 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக 4கோடியே 51லட்சம் கிடைத்ததாக பரகமணி சேவா குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.