மானாமதுரையை சேர்ந்த முதியவர் ஒருவர் மின் கசிவால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க ஷாக் அடிக்காத சுவிட்சுகளை உருவாக்கியுள்ளார். சதாசிவம் என்பவர் நான்கு வருடங்களாக எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். தண்ணீருக்குள் ஷாக் அடிக்காத சுவிட்ச்களை உருவாக்கியுள்ளார். இதில் பிளக்குகளை சொருகினால் மட்டுமே மின்சாரம் வரும். தண்ணீர் போன்ற மற்ற பொருட்களை செலுத்தினாலும் மின்சாரம் பாயாத வகையிள் இந்த சுவிச்சுகளை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில் இந்த சுவிட்சை ஈரத்தோடு தொடலாம் தண்ணீர் பட்டாலும் எதுவும் செய்யாது. ஸ்விட்ச் போட்டால் லைட் எரியும். இதில் தைரியமாக ஈர கையுடன் லைட்டை போடலாம். இந்த சுவிட்சில் இரும்பு கம்பிகளை செருகினாலும் மின்சாரம் பாய்ந்து ஷாக் அடிக்காது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கண்டுபிடிப்புக்கு பலரும் தங்களை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.