Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே செம… விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயனா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

You will see a new Sivakarthikeyan in Doctor,' says the director Nelson  Dhilipkumar

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு என்ற பாடலையும், டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா, சோ பேபி ஆகிய பாடல்களையும் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |