மின்சார வாகனம் தயாரிப்பு நிறுவனமான Wroley என்ற நிறுவனம் தற்போது புதிதாக மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மார்ஸ், பிளாட்டினா, போஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 90 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு 0.10 முதல் 0.15 பைசா மட்டுமே செலவாகும்.
இதில் லித்தியம் அயன் பேட்டரியானது சுப்பீரியர் தரத்துடன் உள்ளது. 48V மற்றும் 60V வரை தரும் வல்லமை கொண்டது. இதில் க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் மோட், கீ ஸ்டார்ட், ஆண்டி தெஃப்ட் சென்சார், உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது ஆறு வகையான நிறங்களில் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் பேட்டரிக்கு 40,000 கிலோ மீட்டர் வரை வாரண்டியும் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.