Categories
பல்சுவை

அடடே சூப்பர்… விமான ஊழியரின் இனிமையான செயல்… இதயங்களை வென்ற வீடியோ… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது கவனத்தை வெகுவாக ஈர்க்கும். அந்த வகையில் ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. அதாவது அழுது கொண்டிருக்கும் குழந்தையை அழகாக சமாதானம் செய்து அதன் அழுகையை விமான ஊழியர் ஒருவர் நிறுத்தியுள்ளார். இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த விமான ஊழியரின் பெயர் நீல் மால்க்கம். அவர் குழந்தையை தூக்கி தனது தோள்களில் போட்டுக்கொண்டு ஒரு கையால் குழந்தையின் முதுகு பக்கத்தில் மெதுவாக தட்டிக் கொடுத்து விமானத்திற்குள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கின்றார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jeevan Venkatesh | JWA (@jeevan_jwa)

 

 

 

யார் என்றே தெரியாத அந்த நபரிடம் குழந்தை ஒட்டிக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவை பார்க்கும் போது குழந்தையும் அவரிடம் நன்கு வசதியாக உணர்வது போன்று தெரிகின்றது. இந்த வீடியோவுடன் ஏர் இந்தியா ஊழியரின் இனிமையான செயலை நான் மிகவும் பாராட்டுகின்றேன். எனது மகள் ஊழியரின் தோள்களில் வசதியாக படுத்திருப்பதை கண்டு நான் ஆச்சரியமடைந்திருக்கின்றேன். அவருக்கு மிக்க நன்றி மேலும் டாட்டா நிறுவனத்திற்கு வந்ததிலிருந்து இந்த பயணத்தை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் எனது வீடியோவில் நான் ஒரு மாமனிதரை கண்டறிந்து இருக்கின்றேன். இந்த நிலையில் இந்த வீடியோவை வைரலாகி@neil_nitin_ub என இவரை அடைய செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் எனவும் குழந்தையின் தந்தை கேப்சனில் எழுதி இருக்கின்றார். இந்த வீடியோவிற்கு தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.

Categories

Tech |