வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற பல செயலிகள் உள்ளது. அதில் உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக whatsapp உள்ளது. இது பயனர்களின் வசதிக்காக தினம்தோறும் புதிய வசதிகளை வெளியிடுகிறது. அதேபோல் தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.
இந்நிலையில் டெஸ்க்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிக்க புதிய ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதாவது ஸ்டேட்டஸ் வழக்கம் போல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் தான் செயல்படும். ஆனால் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை விதிகளையும், மற்றவர்களுக்கு இடையூறாக உள்ளவற்றையும் கண்காணிக்க இந்த புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் இதற்கான சோதனை முடிந்து அனைவருக்கும் இந்த அம்சம் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.