Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… ரயில் நிலையங்களில் இனி இதெல்லாம் வாங்கலாம்…. பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தெற்கு ரயில்வே…!!!!!!

உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு சந்திப்பில் கைத்தறி ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது.

உள்ளூர் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கைவினை கலைஞர்கள், விவசாயிகளின் பெருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், முக்கிய ரயில் நிலையங்களில் One Station One Product என்ற தலைப்பின் கீழ் விற்பனையகம் திறக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். One Station One Product ’’ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் கடந்த மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டு விற்பனை தொடங்கப்பட்டிருந்தது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை செயல்பட்ட இந்த கடையில் நல்ல விற்பனையானதாக நெசவாளர்கள் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஈரோடு ரயில் நிலையங்களில் சென்னிமலை கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் கடை திறக்கப்பட்டிருக்கிறது. இதில் வீட்டு அலங்கார பொருட்கள், பெட்ஷீட், பெட் கவர், தலையணை, போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனையை தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ், சேலம் கோட்டை வணிக பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் போன்றோர்  தொடங்கி வைத்துள்ளனர். மேலும் ஈரோடு ரயில் நிலையத்தில் தொடங்கியுள்ள கைத்தறி விற்பனை மற்றும் கண்காட்சியை காண ஏராளமான பயணிகள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறைந்த விலைக்கு தரமான பொருட்களை விற்பனை செய்யப்படுவதால் பயணிகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பெரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டில் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதேபோல் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி இருக்கிறது. அங்கு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட நெட்டி சிற்பங்கள் வீட்டு உபயோக அலங்காரப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நெட்டி சிற்ப்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ரயில் நிலையங்களில் தற்காலிகமாக ஸ்டால் அமைத்து விற்பனைக்கு அனுமதி அளித்துள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ள  கைவினைக் கலைஞர்கள் நிரந்தரமாக ஒரு கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |