டுவிட்டர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கினார். பின்னர் டுவிட்டரில் புளூ டிக் வசதியை பெற வேண்டும் என்றால் மாதம் தோறும் 659 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போலி கணக்குகளை கண்டறிவதற்காக தற்காலிகமாக புளூ டிக் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிறுத்தி வைக்கப்பட்ட புளூ டிக் வசதி இன்று முதல் கிடைக்கும். இந்நிலையில் முதற்கட்டமாக வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும் எனவும், பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.