தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக கார்த்தி வலம் வருகிறார். இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஜோக்கர், குக்கூ மற்றும் ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கப்பட இருக்கும் நிலையில், தெலுங்கு நடிகர் சுனில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் ஏற்கனவே நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், ஜப்பான் படத்திலும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.