Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்…. என்னன்னு நீங்களே பாருங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் வைத்து நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்  கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறியிருந்ததாவது, “நமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 4,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரம் கைப்பேசி கோபுரங்களை கொண்டுள்ளது. இதனால் நமது நாட்டில் உள்ள கிராமப்புறங்களிலும் மிக வலுவான தொலைத்தொடர்பு சேவையை அளிக்க முடிகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை தொடங்குவதை விரைவுப்படுத்தும் வகையில் பயிற்சி சேவை பரிசோதனை உபகரணங்களை டிசிஎஸ் நிறுவனத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுள்ளது. மேலும் இந்த சேவை அனைத்து நெட்வொர்க்குகளிலும் இருந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகப் பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக பிஎஸ்என்எல் உருவெடுக்கும்.

மேலும் நமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய ரயில்வே பாதுகாப்புத் துறை  தேசிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் புதிதாக கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. ஏற்கனவே 800 புத்தாக்க நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை இணைந்து புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி செயல்பட்டால் மட்டுமே நமது இந்தியா உலக நாடுகளின் கவனத்தை பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |