Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்..! மனித கழிவுகளை அகற்ற ரோபோ…. அரசு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

கம்மம்பள்ளி  அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்த  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மம்பள்ளி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. மேலும் இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்கும் விதமாக ஹுமனோய்டு ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இதையடுத்து இந்த ரோபோவை மாணவர் விக்னேஷ், பள்ளி ஆசிரியர் சுபாஷ் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலின் படி உருவாக்கியுள்ளார். அந்த வகையில் முற்றிலும் தண்ணீர் உட்புகாத வண்ணம் இந்த ரோபோவானது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறக்கி கழிவுகளை அகற்றும் பணியில் இந்த ரோபோவை பயன்படுத்தலாம். மேலும் கழிவுகளை சுத்தம் செய்ய கழிவுநீர் தொட்டிகளில் இறங்கும் போது விஷவாயு தாக்கி, மனிதர்கள் உயிரிழப்பதை இந்த வகை ரோபோக்கள் ஒழிக்கும் என மாணவர் விக்னேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் மதுரை மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட, 3 ஒப்பந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தை நாம் மறந்திருக்க முடியாது. எனவே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் விக்னேஷின் ரோபோவுக்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் வழங்கினால் அவரது வாழ்வாதாரம் ஏற்றம் பெறுவது மட்டுமல்லாமல், தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்விலும் ஏற்றம் பெறும். இவ்வாறு பொதுமக்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |