Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரீமியம் எக்கனாமி பிரிவு பயணச்சீட்டுகள் அறிமுகம்…. அசத்தும் ஏர் இந்தியா…..!!!!!

பிரீமியம் எக்கனாமி பிரிவு பயண சீட்டுகளை பிரபல வினமான  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜேஆர்டி டாடா நினைவு அறக்கட்டளையில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியாவின் தலைமை செயலதிகாரி  கேம்பல் வில்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. ஏர் இந்தியாவை மீட்டெடுப்பதற்காக நீண்ட காலம் மற்றும் குறுகிய கால திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக விமானங்களின் தரை விரிப்புகள், ஜன்னல் திரைகள், இருக்கைகள், உரைகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் பழுது பார்க்கும் இருக்கைகளும், சாதனங்களும்  விரைவில் சரி செய்யப்படும்.

இந்நிலையில் பெரிய சர்வதேச விமானங்களில் பிரீமியம் எக்கனாமி பிரிவு உருவாக்கப்படும். அதில் நீண்ட கால நோக்கில் டாடா டெக்னாலஜிஸ்  போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துவோம். இதன் மூலம் விமானங்களுக்கு தேவையான பாகங்களை நாங்களே  தயாரித்துக் கொள்ள முடியும். மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து சந்தையில் 30 சதவீதம் இடம் பிடிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். இந்நிலையில் இன்னும் 10  ஆண்டுக்குள் சர்வதேச விமான போக்குவரத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிய இந்தியாவுக்கும், இந்திய ஏர்லைன்ஸ்களுக்கும் வாய்ப்புகள் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |