வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க பிரபல நாட்டு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஹாங்காங் நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் அதிலிருந்து சுற்றுலாத்துறை இன்னும் மீளவில்லை. இதனால் நாட்டில் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் இல்லாமல் போராடுகின்றனர்.
இந்த நிலையில் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டிற்கு வர விரும்புகின்ற, வந்து திரும்புகிற சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை கூறியதாவது. அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு அகற்றிய பின்னர் பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விமான டிக்கெட் வழங்குவது பற்றி அனைத்து விமான நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டு அதன் பின்னர் விளம்பரம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.