தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் பயணிக்கும் யுவன் சங்கர் ராஜா 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் தற்போது லத்தி, லவ் டுடே மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சத்தியபாமா பல்கலைக்கழகம் தற்போது கௌரவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 31-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவின் போது யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் டாக்டர் பட்டம் வாங்கிய யுவன் சங்கர் ராஜாவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.