உங்கள் மின்சார சாதனங்களை சார்ஜ் செய்யவேண்டும் என என்னும்போது பவர் பேக் இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் அதனைத் தவிர மின்சாரத்தினை தாயரிக்கக்கூடிய ஒரு ஜெனரேட்டரானது எப்போதும் உங்களுடன் இருந்தால் எப்படி இருக்கும்..? அதுவும் அது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவு சிறியதாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா..? ஆகவே தற்போது கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் பாக்கெட்டில் பொருந்தக்கூடிய ஒரு உறுதியான ஜெனரேட்டர் வந்து விட்டது. இதில் பாக்கெட் ஜெனரேட்டர் மின்சாரத்தினை உருவாக்குகிறது. இந்த மினி ஜெனரேட்டர் உருவாக்கும் மின்சாரத்திலிருந்து பவர் பேங்குகள் மற்றும் ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யலாம்.
கைக்குள் அடங்கிவிடும் அளவிலுள்ள ஜெனரேட்டர் இது. அடிக்கடி சுற்றுலா சென்றாலோ (அல்லது) நண்பர்களுடன் வெளியூர் சென்றாலோ உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது மற்ற பாக்கெட் சைஸ் சாதனங்களின் பேட்டரி எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துவிடும். அத்தகைய நிலையில் உரிய நேரத்தில் மின்சாரம்வேண்டும் என்ற சூழல் ஏற்படும். இல்லையெனில் யாரையும் தொடர்பு கொள்வதே கஷ்டமாகிவிடும். ஸ்மார்ட் போன் ஆப் ஆகிவிட்டால் அவ்வளவு தான். இதுபோன்ற நிலை உங்களுக்கு ஏற்படக் கூடாது என நீங்கள் விரும்பினால், ஒரு பாக்கெட்அளவு ஜெனரேட்டரை வாங்கி கைக்கு அடக்கமாக வைத்து பயன்படுத்தலாம். இதன் வாயிலாக உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் பிற சாதனங்களை நிமிடங்களில் சார்ஜ்செய்ய முடியும். இவற்றில் சிறப்பு என்னவெனில் பேட்டரி இல்லை.
பாக்கெட்அளவு ஜெனரேட்டர்
World Care Usb Hand Power Dynamo Torch Hand Crank Usb என்ற மினி ஜெனரேட்டரின் விலையானது ரூ. 4239 மட்டுமே. மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் இந்த ஜெனரேட்டர் அவசரகாலங்களில் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் 54 % தள்ளுபடிக்கு பின் ரூ. 1,969 என்ற மிகவும் குறைந்த விலைக்கு இது கிடைக்கிறது. மிகவும் குறைவான எடையுடைய இந்த இலகுரக ஜெனரேட்டரின் பொறி முறையும் மிகவும் எளிதானது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒரு லீவரைத் திருகி, ஸ்மார்ட் போன் (அல்லது) பிற சாதனங்களை சார்ஜ்செய்ய வேண்டியது தான். வழக்கமான பவர்பேங்கைப் போன்றே செயல்படும்போது ஸ்மார்ட் போன் உட்பட பிற சாதனங்களை சார்ஜ் செய்யலாம். இது மிகவும் வலுவான சாதனம் ஆகும். அமேசானில் இந்த மினிபாக்கெட் ஜெனரேட்டர் கிடைக்கிறது.