Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பத்ம பூஷன் விருதைப் பெற்ற மைக்ரோசாப்ட் சிஇஓ…. வெளியான முக்கிய தகவல்….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சாதனை படைத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4  பத்ம பூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 17 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த  விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேரில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  சிஇஓ சத்திய நாதெல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் இந்திய கவுன்சில் ஜெனரல் டாக்டர் டி.வி. நாரேந்திர பிரசாத்திடம் இருந்து  விருதை பெற்றுக் கொண்டார்.

இது குறித்து நாதெல்லா கூறியதாவது. இந்திய நாட்டின் குடியரசு தலைவர்,பிரதமர் மற்றும் மக்களுக்கு நான்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்நிலையில் நான் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன்  பணிபுரிய விரும்புகிறேன். மேலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் வளர்ச்சி அடைய உதவுவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த சத்தியநாதன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |