நாளையும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் , வியாபாரம், கல்வி, வேலை என தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் வாகனங்கள் எதுவும் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சென்டிரல் -அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய பகுதிகளின் வழியாக செல்லும் மின்சார ரயில் நாளையும் இயக்கப்படுக்கிறது.