கால் இல்லாத யானை ஒன்றுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க வைக்கும் யானைப்பாகனுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்த காட்சி டுவிட்டரில் பகிரப்பட்டிருக்கிறது.இந்த வீடியோவில் பெரிய யானை ஒன்று மூன்று கால்களுடன் நின்று கொண்டிருக்கிறது.
அந்த யானையின் அருகிலுள்ள பாகன் யானையின் பாதிக்கப்பட்ட காலில் ஷாக்ஸ் போன்ற ஒன்றை மாட்டிவிடுகின்றார்.
மேலும் அதனை தொடர்ந்து நடக்க உதவும் இரும்பு ஸ்டான்ட் போன்ற ஒன்றை யானையின் காலில் மாட்டுகிறார். யானையின் காலில் அவர் அதனை மாட்டிய உடனே, யானை பாகனுக்கு பின்னே அந்த யானையும் மெதுவாக இரும்பு காலை தூக்கி வைத்து நடந்து வருகிறது. இந்த நெகிழ்ச்சியான தருணம் இணைத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.