நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சிஆர்பிஎஃப்-யில் பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கடந்த 1987 ஆம் ஆண்டில் முதல் முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிஆர்பிஎப் அதிவிரைவு படை ஐ.ஜி.யாக பெண் அதிகாரி ஆனி ஆப்ரஹாம், பீகார் பிரிவு ஐ.ஜி.யாக சீமா துந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்று அந்தப் படையின் தலைமை அலுவலகம் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிவிரைவு படைக்கு பெண் ஐ.ஜி தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த இருவரும் 1987 ஆம் ஆண்டு முதல் முறையாக சிஆர்பிஎஃப் பணியில் இணைந்த பெண் அதிகாரிகள் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார். மேலும் ஐநாவின் இந்திய பெண்கள் காவல் குழுவுக்கு ஏற்கனவே தலைமை தாங்கிய இவர்கள் சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்தை வென்றவர்கள் ஆவர்.