கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கோவை மாவட்டத்தில் அதிகமான மழை பெய்தால் கூட மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து 8,409 கிலோமீட்டர் மழைநீர் வடிகாலுக்கான கட்டமைப்புகள் உள்ளதாகவும் அதில் 5407 km அளவிற்கு தற்போது வரை தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து ஸ்காட்லாண்டில் கடலில், காற்றாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று உற்பத்தி துவங்கி உள்ளது. அதனை முதல்வரின் அறிவுத்தலின்படி சென்று பார்வையிட்டதாகவும் அதனை தமிழகத்தில் செயல்படுத்த ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அது குறித்து முழு ஆய்வு மேற்கொண்ட பின்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்ட பின் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சில இடங்களில் பொதுமக்கள் எவ்வித புகார் அளிக்காமல் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்துவதாகவும், புகார் மனுக்கள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் இடங்களில் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும், சில இடங்களில் டெண்டர் செய்த பின் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்பட வேண்டும். இதனையடுத்து தமிழகத்தின் தலைநகர் சென்னை இருந்தாலும் தொழில்துறையின் தலைநகரமாக கோவையை உருவாக்க வேண்டும் என்பதே முதல்வரின் லட்சியம். மேலும் மழையால் பாதிப்புகள் அடைந்த வீடுகள், சாலைகள் குறித்து கிராம வாரியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.