Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. குழந்தை பிறந்த பிறகு முதன்முதலாக குதிரை சவாரி செய்த பிரபல நடிகை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் வலம் வருகிறார். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலூ என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நீல் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து காஜல் அகர்வால் தற்போது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வரும்நிலையில் குதிரை சவாரி செய்யும் ஒரு வீடியோவை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனுடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன். எனக்கு குழந்தை பிறந்த பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் என்னுடைய வேலைக்கு திரும்பி இருக்கிறேன். எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியும். அதாவது உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை நான் செய்தேன். ஆனால் குழந்தை பிறந்த பிறகு முன்பு இருந்த மாதிரி எனர்ஜி லெவலை கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. நம்முடைய உடல் மாறினாலும் ஆர்வம் மட்டும் ஒருபோதும் மாறாது.

குதிரை மேல் சவாரி செய்வது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால் எல்லை இல்லாத ஆசை இருக்கிறது. நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய தேர்வு குறித்து என்றைக்குமே நாம் கவலை பட கூடாது. இந்தியன் 2 திரைப்படத்தில் மீண்டும் இணைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வேலைக்காக புதிய பொறுப்புகளை கற்றுக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு எப்போதும் நான் நன்றி உடையவளாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CiwQmhYBe2p/?utm_source=ig_embed&ig_rid=71f37028-b4d0-4996-8968-33ef2fb256c3

 

Categories

Tech |