Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… கல்லூரி விழாவில் மாணவ மாணவிகளுடன்… ஐஏஎஸ் அதிகாரி… வைரலாகும் வீடியோ…!!!!

தனியார் கல்லூரி விழாவில் மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடிய ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அதிகாரி திவ்யா எஸ் நாயர் கலந்து கொண்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதில்  மாணவ மாணவியருடன் நடனத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் நாயர் திடீரென மாணவ, மாணவியருடன் இணைந்து நடனம் ஆடத் தொடங்கி உள்ளார். இதனால் மாணவ, மாணவியர் மட்டுமின்றி விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் இந்த நடனக் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |