Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ஓய்வூதியதாரர்கள் இனி வீட்டில் இருந்தபடியே…. இப்படி ஒரு வசதியா?…. இனி எல்லாமே ரொம்ப ஈசி….!!!!

ஓய்வூதியத்தார்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். அப்படி வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்ஷன் வராது. மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், EPFO ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.முன்பெல்லாம் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியத்தாளர்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்காக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் தபால் அலுவலக சேவையை பயன்படுத்தி வீட்டில் இருந்தே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது மிகவும் எளிதான ஒன்றுதான்.அதற்கு இந்திய தபால் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களின் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை பெற்றுக் கொள்கிறது.

இந்த சேவை மூலமாக ஓய்வூதியதாரர்கள் வீண் அழைச்சார் இல்லாமல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். அதற்கு முதலில் ஓய்வூதியதாரர்கள் 155299 என்ற இலவச எண்ணை அழைத்து கோரிக்கையை வைக்க வேண்டும். அப்படி செய்தால் உங்கள் முகவரிக்கு தபால்காரர் வந்து உங்களின் வாழ்நாள் சான்றிதழை பெற்றுக் கொள்வார். அதற்கு நீங்கள் 70 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |