மாநிலங்களுக்கான செலவினத்துறை மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மத்திய அரசு செலவினத்துறை மானியம் வழங்குவது வழக்கம். அதேபோல் 2022-2023- ஆம் ஆண்டிற்காக 4,761.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் நமது தமிழ்நாட்டிற்கு இதுவரை 14.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திராவுக்கு 136 கோடி ரூபாயும், உத்திரபிரதேசத்துக்கு 720 கோடி ரூபாயும், மராட்டியத்துக்கு 797 கோடி ரூபாயும், சதிஸ்கார் மாநிலத்திற்கு 109 கோடி வழங்கப்பட்டுள்ளது.