Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. ஏழை பெண்களுக்காக பீகார் அரசின் புதிய முயற்சி….. அசத்தலான அறிவிப்பு….!!!!

பீகாரில் வீணடிக்கப்படும் காலி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்கும் முயற்சியில் அம் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் பாட்னாவில் இருந்து தொடங்கப்பட உள்ளதாகவும் இவை குடிசைத் தொழிலாக செயல்படும் எனவும் அமைச்சர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏழை பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் ஜீவிகா அமைப்பின் தொழிலாளர்கள் மூலம் எல்இடி பல்ப் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக  பொருளதார ரீதியாக தன்னிறைவு அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தற்போது நொறுக்கப்பட்ட மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல் தயாரிக்கும் மூலப்பொருளாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |