பிரபல நடிகர் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது அஜித் மோட்டார் சைக்கிளில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை சுற்றி வருவது தெரியவந்துள்ளது. இவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் சக பைக் வீரர்களுடன் எடுத்த புகைப்படங்கள் போன்றவைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் தனக்கு மிகவும் பிடித்த நிறுவனமான பிஎம்டபிள்யூ பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.