இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைத்தானிய கதாநாயகனாக நடிக்க இருக்கும் திரைப்படம் என் சி 22. தற்காலிகமாக என்சி 22 என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. மேலும் இதில் சரத்குமார், அரவிந்தசாமி, வெண்ணிலா, கிஷோர், பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஸ்வநாத் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். என் சி 22 என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தற்போது இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் மைசூரை சுற்றியுள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதனை பட குழு சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.