பிரசித்தி பெற்ற கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.
உலகிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் தரிசனம், இலவச தரிசனம் என பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இலவச தரிசனத்தில் டைம்ஸ் லாக் முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகிறது.
தற்போது திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக நிலவுகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் பெருமாளை தரிசனம் செய்கிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 59 ஆயிரத்து 376 பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் 4.60 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது.