Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்!…. இனி வேலையாட்கள் தேவை இல்ல…. இதுவே போதும்…. குஷியில் விவசாயிகள்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவீன தொழில்நுட்ப உத்திகளை கையாண்டு தண்ணீர் பாய்ச்சுதல், நாற்று நடுதல், நிலத்தை உழுதல், கதிர் அறுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வெளி நாடுகளுக்கு இணையாக தற்போது டிரோன் எந்திரங்களை பயன்படுத்தி பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளம்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள் வேலையாட்கள் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க மோட்டார் ஸ்பிரேயர் கொண்டு பூச்சி மருந்து தெளித்து வந்தனர். இதனால் அதிக செலவும், அதிக நேரமும் ஆனதால் தற்போது டிரோன்களை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் காலை, மாலை வேலைகளில் வேலையாட்கள் யாரும் இல்லாமல் பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் தங்களது பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர். ஒரு சில இளம் விவசாயிகள் மட்டுமே தற்போது டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வரும் காலங்களில் அனைத்து விவசாயிகளும் டிரோன்களை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |