Categories
Uncategorized தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி வங்கி கணக்கெல்லாம் ரொம்ப ஈசி…. வந்தாச்சு whatsapp பேங்கிங்….!!!!

வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் சேவையை டிஜிட்டல் வங்கி சேவைகள் எளிதாக்கியுள்ளன. இதனால் வங்கிக்கு நேரில் செல்லும் தேவையும் குறைந்துள்ளது.மங்கி தொடர்பான நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தளங்கள் மூலம் பல பணிகளை இப்போது வீட்டில் இருந்து கொண்டே செய்து முடிக்கலாம். இவ்வாறான மற்றொரு டிஜிட்டல் சேவை தான் வாட்ஸ் அப் பேக்கிங். இந்த சேவையை எஸ்பிஐ, ஐ சி ஐ சி ஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் வழங்கி வருகின்றன.

இந்த வங்கி வாடிக்கையாளர்கள் இனி அவர்களின் பேலன்ஸ், மினி ஸ்டேட்மெண்ட்ஸ், கிரெடிட் கார்டு ரிவார்டுகள், செலுத்தப்படாத கட்டணங்கள் போன்றவற்றை வாட்ஸ் அப் மூலமாக எளிதில் தெரிந்து கொள்ளலாம்.இந்த சேவையை பெறுவதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மூலம் whatsapp சேவை காண எஸ்எம்எஸ் அனுப்பினால் மட்டும் போதும் அந்த சேவை இணைக்கப்பட்டு விடும்.வங்கியில் இதை பதிவு செய்தவுடன் நீங்கள் அனைத்து வங்கி சேவைகளையும் உடனுக்குடன் whatsapp மூலமாகவே எளிதில் பார்த்துக் கொள்ளலாம்.

Categories

Tech |