Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இந்தியாவிலேயே முதல்முறையாக “தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம்”…. வெளியான தகவல்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் அரிதான கடற்பசு இனத்தையும், வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று நமது தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய 448 சதுர கிலோமீட்டர் பாக் விரிகுடாவில் கடல்பசு  பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் மாற்று வனத்துறை நேற்று ஆணை பிறப்பித்துள்ளது. அதில் கடற்பசுக்கள் கடர்புற்களை உண்டு வளர்கின்றது. இந்நிலையில் இந்த கடற்பசுகளை பாதுகாப்பதால் கடல் பகுதிக்கு அடியில் உள்ள கடற் புழுக்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்த உதவுகிறது.

இதனையடுத்து பாக்விரிகுடாவை ஒட்டி கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் கடற்பசுகளை பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்து கொண்டு பலமுறை மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை வெற்றிகரமாக கடலில் விட்டுள்ளனர். இதனை பாராட்டி தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடற்பசுக்கள் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் கடற்பசு  இனங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. தற்போது 240 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பான்மையான கடல்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரையில் காணப்படுகிறது. எனவே இவற்றை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

இந்நிலையில் நமது தமிழக அரசு கடலோர சமூகத்தினருடன் குறிப்பாக உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பாக்விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மக்களுக்கு விதிக்கப்படுவதில்லை. மேலும் இந்த பாதுகாப்பகம் இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்படும் என்ற பெருமைக்குரியது . மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகிலும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரும் பெருமை கொள்வர்.ஏனென்றால் நமது நாட்டில் கடல் சார் உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஒரு சிறிய முக்கிய மைல்கல்லாக இது  விளங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |