Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஆதார் பட இயக்குனருக்கு செம சர்ப்ரைஸ்…. காரை பரிசாக வழங்கி அசத்திய தயாரிப்பாளர்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வரும் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் திண்டுக்கல் சாரதி போன்ற திரைப்படங்களின் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் ஆதார் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் காரணமாக படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கருணாஸ், இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, திலீபன், நடிகை இனியா, ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாவின்போது படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் இயக்குனர் ராம்நாத் பழனி குமாருக்கு ஒரு காரை பரிசாக கொடுத்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |