கோடக் மஹிந்திரா வங்கி அரசு ஊழியர்களுக்கான பிரத்தியேகமான சம்பள கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சேலரி அக்கவுண்ட் . இதில் மத்திய அரசு ஊழியர்கள்,மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைவரும் சம்பள கணக்கை தொடங்க முடியும். இதில் பல்வேறு அம்சங்கள் மற்றும் சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். இது வாழ்நாள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அதாவது இதில் கணக்கு வைத்திருப்போர் வாழ்நாள் முழுவதும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் இதில் சர்வீஸ் சார்ஜ் இல்லாத இலவச லாக்கர் வசதியும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சம் ரூபாய் வரை இலவசமாக டெபாசிட் செய்து கொள்ள முடியும். குறிப்பாக ஒரு மாதத்திற்கு 30 பரிவர்த்தனைகளை இலவசமாக நாம் மேற்கொள்ளலாம். இதிலுள்ள கணக்கு தாரர்களுக்கு இலவசமாக ஒரு பிளாட்டினம் டெபிட் கார்டு வசதி வழங்கப்படும். அதிலும் குறிப்பாக குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கூடுதல் டெபிட் கார்டு வழங்கும் வசதியும் இதில் உள்ளது.
மற்ற அம்சங்கள்:
- 50 லட்சம் ரூபாய் வரை தனிநபர் விபத்துக் காப்பீடு
- சாலை மற்றும் ரயில் விபத்தால் ஊனமுற்றவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை காப்பீடு
- குறிப்பிட்ட இந்திய பிராண்டுகளின் பொருட்களை வாங்கும்போது 5% கேஷ்பேக் சலுகை
- உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் Lounge பயன்படுத்த அனுமதி.
- குழந்தைக்கு 4 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன். இந்த கடனுக்கு வட்டி சலுகை உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் உண்டு.