Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. அயோத்தி நகர் சா்வதேச சுற்றுலாத் தலமாக மாறும்…. -முதல்வர் யோகி ஆதித்யநாத்….!!!!

அயோத்தியில் ராமா் கோவிலானது கட்டப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் இறுதிக்குள் கோவிலைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. ராமா் கோவிலை மையப்படுத்தி அயோத்தி நகா் முழுவதையும் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் அயோத்தியில் ரூபாய்.1,057 கோடி மதிப்பிலான 46 வளா்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று துவங்கி வைத்தாா். அந்த நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது, நவீன இந்தியாவின் புது உத்தரபிரதேசத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் அயோத்தி முக்கியபங்கு வகிக்கும். பிரதமா் மோடி தலைமையின் கீழ் ராமா்கோவில் அயோத்தியில் கட்டப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக 500 வருடகால காத்திருப்பு நிறைவடைந்து உள்ளது. அயோத்தியின் வளா்ச்சிக்காக முன்னதாகவே ரூபாய்.30,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய-மாநில அரசுகளானது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கிடையில் அயோத்தி நகரை அனைத்து அடிப்படையிலும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும். பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளால் அயோத்தி நகர் சா்வதேச சுற்றுலாத் தலமாக மாறும் என்று கூறினார்.

Categories

Tech |