Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… அன்பு மட்டுமே போதும்… இப்படி ஒரு காதலா…? வியப்பில் இணையதளவாசிகள்…!!!!!!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்த சொள என்னும் இளம்பெண் ஒருவர்  ஹூ என்பவரை சந்தித்துள்ளார். அவர்களது முதல் சந்திப்பிலேயே  காதல் வந்துவிட்டது.  ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது  மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார்.

அந்த இளம் பெண் இது குறித்து  பேசும்போது, “காதலில் பணம் முக்கியம் இல்லை என்றும் அவரது அன்பு மட்டுமே போதும் என கூறியுள்ளார். தன்னுடைய வருங்கால கணவர் குடும்பத்திற்கு சரியானதை செய்வார் என நம்புவதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து சொள தனக்கு கடனாக கொடுத்த பணத்தை விரைவில் திருப்பி அளித்து விடுவதாகவும், அவளை கவனித்துக் கொள்வதற்கு கடினமாக உழைக்கப் போவதாகவும் ஹூ தெரிவித்துள்ளார். இவர்களின் பெருந்தன்மையை பார்த்து சமூகதளவாசிகள் வியப்படைந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Categories

Tech |