Categories
கொரோனா மாநில செய்திகள்

அடடே சற்று நிம்மதி..!! தமிழகத்தில் 100க்கு கீழ் பாதிப்பு…. வெளியான கொரோனா ரிப்போர்ட்….!!

 

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு வேகமாக குறைந்த நிலையில், தற்போதைய நிலவரபடி  கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 105 ஆக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் த்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  34 லட்சத்து 51 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ள நிலையில் 223 பேர் ஒரே நாளில் சிகிச்சைக்குப்பின் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர் . மேலும்  மாநிலம் முழுவதும் 1173 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதோடு மூன்று நாட்களாக  உயிரிழப்பு எ துவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |