நடிகர் அஜித் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அஜித் . 1999 ஆம் ஆண்டு இவர் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’ . இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தும் நடிகை ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு மகளும் 2015 ஆம் ஆண்டு ஒரு மகனும் பிறந்தனர் .இவரது மகள் பெயர் அனோஷ்கா மற்றும் மகனின் பெயர் ஆத்விக் . அஜித்தின் மகனை குட்டி தல என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர் .
இந்நிலையில் நடிகர் அஜித்தின் மகனான ஆத்விக் ஷாலினியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அடடே குட்டி தல வந்துட்டாரே’ என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இந்தப் படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார் . போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.