Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! கீர்த்தி சுரேஷ்க்கு தடபுடல் விருந்து….. கொடுத்தது யார்….? எதற்காக தெரியுமா….???

பரியேறும் பெருமாள், கர்ணம் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படக்குழுவினருடன் நேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்பொழுது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கீர்த்தி சுரேசுக்கு உதயநிதி மற்றும் படக்குழுவினர் அனைவரும் வாழ்த்துச்சொல்லி, அவருக்கு ஓணம் விருந்து கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |