அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களில் அதிகமானோர்க்கு கோடைகால இறுதிகளில் அல்லது இலையுதிர் கால தொடக்கத்தில் அவர்களுக்கான தடுப்பூசி அளிக்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் தடுப்பூசிக்குரிய திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஜோபைடன் நிர்வாகம் சுமார் 100 மில்லியன் மக்களுக்கு 100 நாட்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது.
எனவே இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான முதல் பகுதியாக அடுத்து வரும் மூன்று வாரங்களில் தினசரி குறைந்தது 1.5 மில்லியன் தடுப்பூசிகளும் வாரத்திற்கு 10 மில்லியன் தடுப்பூசிகளும் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன் படி இந்த வருடம் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக மாநில வாரியாக தடுப்பூசிகளுக்கான டோஸ்கள் அதிகரிக்கப்பட்டு விரைவுபடுத்தப்படும் மற்றும் பைசர், மாடர்னா நிறுவனங்களில் இருந்தும் ஒட்டு மொத்தமாக 200 மில்லியன் தடுப்பூசிகள் டோஸ்கள் பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.