Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம… வடிவேலுவுடன் முதல் முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்…!!!

வடிவேலு புதிதாக நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் இவரை புதிய ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது. இதனால் வடிவேலு கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் வடிவேலு கதநாயகனாக நடிக்க இருக்கிறார்.

Santhosh Narayanan to compose for Vadivelu, Suraj film! Tamil Movie, Music  Reviews and News

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வடிவேலு இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |