Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம… முதல் முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…!!!

நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Ulaga Nayagan Kamal to join hands with the Superstar director? - Tamil News  - IndiaGlitz.com

இந்நிலையில் கமல்ஹாசன் முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம், இந்தியன்-2 படங்களில் நடித்து முடித்தபின் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |