Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா….? “அப்போ படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான் போங்க”…. தலைவர் 169-ல் இணைய உள்ள பிரபல நடிகர்….!!!

தலைவர் 169 படத்தில் நடிகர் சிம்பு  இணைந்து பாடல் ஒன்றை பாட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 50 வருடங்களாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் அவரது மாஸ் குறையாமல் அப்படியே இருக்கிறார். இருப்பினும் அவரின் கடந்த சில படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் வெற்றி பெறவில்லை. இதனால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை உலக மக்களுக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இந்த வருத்தத்தை போக்க முடிவு செய்த ரஜினி தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இந்தப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில், இளம் இயக்குனரான நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த ப்ரோமோவில் தலைவர் 169 அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். மேலும் இப்படம் ரஜினியின் பழைய பார்முலாவில் கமர்சியல் கலந்த மாசான படமாக உருவாக உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய ஒரு தகவல் இணையதளத்தில் வேகமாக பரவியது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாட உள்ளாராம். மேலும் அனைத்து சினிமா துறைகளிலும் திறமை உள்ள சிம்பு பாடும் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது நமக்கு தெரிந்ததுதான். இதனால் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் இசையில் சிம்பு பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த அறிவிப்பு உண்மையானால் ரஜினி ரசிகர்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும் செம்ம விருந்தாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |